Nee Yenge Yen Anbe Lyrics – Chinna Thambi
நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
விடிகிற வரையினில் கதைகளை படித்ததை
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இது
துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே
வாழும்பொது ஒன்றாக வாழவேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே...
வீதி என்றும் வெட்டவெளி பொட்டலென்று வெண்ணிலவு
பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டை சுடுகாடு என்றும் தென்றல் இங்கு
பார்க்குமா பார்க்குமா
எத்தனென்றும் ஏழை பணக்காரனென்றும் ஓடும் ரத்தம்
பார்க்குமா பார்க்குமா
பித்தனென்றும் பிச்சைபோடும் பக்தனென்றும் உண்மை தெய்வம்
பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே...
0 comments:
Post a Comment