Monday, November 1, 2010

Aagaya Vennilave Song Lyrics - அரங்கேற்ற வேளை

Aagaya Vennilave from Arangetra Velai

 

படம்: அரங்கேற்ற வேளை
பாடல்: ஆகாய வெண்ணிலாவே!


ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல்
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண்:
தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்:
இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்:
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்:
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்:
நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

பெண்:
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்:
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்:
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்:
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

பெண்:
இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்:
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

0 comments:

Disclaimer

This blog does not host any of the files mentioned on this blog or on its own servers. It only points out to various links on the Internet that already exist and are uploaded by other websites or users there. Links to albums will be removed if there is a complain from the artist or publisher.
Related Posts Plugin for WordPress, Blogger...