Mannil Intha Kaadhal Andri Lyrics - Keladi Kanmani - Ilaiyaraaja
மண்ணில் இந்த காதல் அன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி
ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா (மண்ணில்)
வெண்ணிலவும் பொன்னிநதியும்
கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்
பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும்
வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும்
குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில்
உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல்
பிறப்பிதுதான்.....(மண்ணில்)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும்
புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
என்னைவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள்
அல்லவா (மண்ணில்)
0 comments:
Post a Comment